வாரணாசி

பிரதமர் மோடி வாரணாசிக்கு வருவதற்கு சில மணி முன்பு விஷமிகளால் ராஜிவ் காந்தியின் சிலை மீது கரி பூசப்பட்டுள்ளது.

நேற்ற் பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசிக்கு வருகை புரிந்தார். அவர் அங்கு தேசிய நெடுஞ்சாலையைத் திறந்து வைத்தார்.  மேலும் காசி விஸ்வநாதரை தரிசித்த பிறகு கங்கை கரையில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி காணொலியைக் கண்டு களித்தார்.  அதன் பிறகு அவர் மக்களிடையே உரையாற்றினார்.

இந்நிலையில் அவர் வருவதற்குச் சிலமணி நேரம் முன்பு வாரணாசியில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலையில் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.   இதற்கு கண்டனம் தெரிவித்த உள்ளூர் காங்கிரசார் அந்த சிலையைப் பாலால் துடைத்துச் சரி செய்தனர்.   மேலும் இதைச் செய்தவர்களைக் கண்டறிய விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் தனது கண்டனச் செய்தியில் காவல்துறை இந்த விஷமிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  நாட்டுக்காகத் தியாகம் செய்துள்ள தலைவர்களை இவ்வாறு அவமானப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.