ஹிரோஷிமா

பிரதமர் மோடி ஜப்பானில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்துள்ளார்.

ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் ஜி7 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.

ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மோடியும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார்.  ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு மகாத்மா காந்தி உருவச் சிலையைத் திறந்துவைத்தார். ஹிரோஷிமாவில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.

மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி,

”ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ளபோது மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹிரோஷிமாவில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை அமைதி பாதைக்கு அழைத்துச் செல்லும்” 

எனத் தெரிவித்துள்ளார்.