டெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மசோதா நிறைவேறியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இந் நிலையில் பிரதமர் மோடி தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு இருக்கிறது. நான் முன்பு சொன்னேன், மீண்டும் சொல்கிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும், அரசு கொள்முதல் செய்யும் நடைமுறையும் தொடரும்.
விவசாயிகளை ஆதரிப்பதற்கும் அவர்களின் வரும் தலைமுறையினருக்கு சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.