சென்னை: பிரதமர் மோடி தமிழக வர இருக்கும் நிலையில், டிவிட்டரில், மீண்டும்  #GoBackModi   ஹேஷ்டேக் டிரெண்டிங்காக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை திறந்து பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதாகவும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சென்னையில் கடும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகைக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகிறது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி தமிழகம் வரும்போதும்  #GoBackModi என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங்கான  நிலையில் தற்போது மீண்டும் டிரெண்டிங்காக்கப்பட்டு வருகிறது.