டெல்லி: பிரதமர் மோடி, ஜுலை 2ந்தேதி வெளிநாடு பயணமாகிறார். அவரது பயணத்திட்டம் 8 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின்போது, 5 நாடுகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது.

உலக நாடுகளிடையே போர்மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜுன் மாதம் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கு சென்றார். அவரின் 3 நாள் பயணத்தின்போது, கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பென்கொவிக்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாயகம் திரும்பினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அடுத்த வெளிநாட்டு பயண திட்டம் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரதமர் மோடி ஜூலை 2-9 வரை 5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். போர் நடைபெற்று வரும், பிரேசிலைத் தவிர, எட்டு நாள் பயணத்தின் போது கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
இதற்கு முன் பிரதமர் மோடி கடைசியாக 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய ஐந்து நாடுகள் ஒரே முறையாக பயணம் மேற்கொண்டார். இந்த முறை, ஜூலை 2 முதல் ஜூலை 9 வரை எட்டு நாட்கள் கானா, அர்ஜென்டினா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். இதில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக பிரேசிலில் நான்கு நாட்கள் தங்க இருக்கிறார்.
2015 ஜூலை மாதத்தில் இதேபோல், ரஷ்யா மற்றும் ஐந்து மத்திய ஆசிய நாடுகள் பயணத்திற்காக எட்டு நாள் அவர் செலவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் மற்றொரு 8 நாள் பயணமாக அமெரிக்காவின் 2019ஆம் ஆண்டு பயணம் இருந்தது. இதில், பிரதமர் மோடி, நியூயார்க், ஹூஸ்டன் மற்றும் சிகாகோ ஆகிய மூன்று நகரங்களுக்குச் சென்றார். பின்னர் மோடி ஐ.நா. பொதுச் சபையில் கலந்து கொண்டார். மேலும் ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்வில் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்தார்.