இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்கும் உத்தி குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளதுடன் அதுவரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அதேவேளையில், இந்தியாவின் விவசாய மற்றும் பால் சந்தையில் அமெரிக்கா அதிகப்படியான அணுகலை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் துறையின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டோம் என்று பிரதமர் மோடி நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.