டெல்லி: வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டானது வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ம் தேதி நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டிற்கு பிறகு முதல் கட்ட நாடாளுமன்ற கூட்டம் பிப்ரவரி 15ம் தேதி வரையிலும், 2ம் கட்டமாக மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் கூட்டம் நடைபெறும்.
இந் நிலையில், ஜனவரி 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ள எம்பிக்கள் அனைவரும் 27, 28 தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.