டில்லி: டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கில், மாநிலங்களில் கவனம் செலுத்தும் நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இன்றைய  கூட்டத்தின் கருப்பொருள் ‘விசித் பாரதத்திற்கான விசித் ராஜ்யம்@2047’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தJ.

இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேற்குவங்க முதல்வர் மம்தா உள்பட சிலர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் நிடி ஆயோக் அமைப்பின் ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று (மே 24) நடைபெற்று வருகிறது.. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். தற்போது நடைபெற்ற வரும் நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்தில், 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி . . திரிபுரா முதல்வர் மணிக் சாஹா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உ.பி. முதல்வர் யோகி, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துலா, டெல்லி, மகாராஷ்டிரா முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள்  பங்கேற்றனர்.

இந்த  கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை. அதே சமயத்தில் கேரள முதல்வருக்கு பதிலாக  கேரள நிதியமைச்சர்  கே.என். பாலகோபால் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.