புதுடெல்லி:
பிரதமரின் சில முடிவுகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி கங்கையில் நீராடுகிறார் ஆனால் வேலையில்லா திண்டாட்டம் பற்றி பேசமாட்டார்.

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய கேள்விகளாக உள்ளன என்றும், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா நெருக்கடியில் கண்டுகொள்ளாது ஆகியவை வேலையின்மைக்கு முக்கிய காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமரின் சில முடிவுகளால் நடுத்தர மக்கள், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.