ஐதராபாத்:

தனிப்பட்ட தாக்குதல் நடத்தாமல் கொள்கையைப் பற்றி பேசுங்கள் என பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை வழங்கியுள்ளார்.


தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், “என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை பிரதமர் மோடி தொடுக்கிறார். இவரைப் போன்ற சிறுபிள்ளைத்தனமான பிரதமரை நான் பார்த்ததில்லை.

மத ரீதியாக மக்களை மோடி துண்டாடுகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் பாகிஸ்தான், இந்துக்கள் மற்றும் ராமர் கோயில் பிரச்சினையை பாஜக எழுப்பும்” என்றார்.