ஓமன் சென்றடைந்தார் மோடி…..மேற்கு ஆசிய சுற்றுப்பயணம் நிறைவு

Must read

மஸ்கட்:

ஓமன் தலைநகர் மஸ்கட் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று அபுதாபி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஓமன் புறப்பட்டார்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு துணை பிரதமர் சையது பஹாத் பின் முகம்மது மோடியை வரவேற்றார்.

பின் கிராண்ட் ஹையத் ஹோட்டலில் ஓமன் வாழ் இந்தியர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் மூலம் மோடியின் மேற்கு ஆசியா சுற்றுப் பயணம் நிறைவுபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article