டெல்லி:  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அஇதிபர் முய்சு,  டெல்லியில்  உள்ள ஹைதராபாத் இல்லத்தில்  பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்ன தாக ராஷ்டிரபதி பவன்  வந்த முய்சை  குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

 5 நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மனைவி சஜிதாவுடன்  நேற்று (அக்.6) இந்தியா வந்தார்.   டெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து நேற்று மாலை மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று காலை (அக்.7) மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் முகமது மூயிஸை வரவேற்றனர். தொடர்ந்து, அவருக்கு அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

முகமது முய்சுக்கும், அவரதுமனைவி சஜிதாவுக்கும் ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார், அவருடன் வெளியுறவுத் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங்கும் உடன் சென்றார்.

இதன் பிறகு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லியில் உள்ள ஐதரா பாத் இல்லத்துக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அவரை கை குலுக்கி வர வேற்று பிரதமர் மோடி அழைத்து சென்றார். பின்னர் மோடியும்-முகமது முய்சுவும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரு நாடுகள் இடையேயான பரஸ்பர நலன், மேம்பாடு, உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இந்த பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.