டெல்லி: பிரதமர் மோடிக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே”, இது ஒரு நாடகம் என என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள புன்னிய பூமியான, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு வருகிறார். இன்று 3வது நாளாக அவரது தியானம் தொடர்கிறது. பிரதமரின் தியானம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்திய அரசியல் களத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வரவேற்பு மற்றும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மோடியின் விமர்சனத்தை, அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்,
பிரதமர் மோடிக்கு “கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே. தனது வீட்டிலேயே தங்கி 45 மணி நேரம் தியானம் செய்திருக்க லாமே? கன்னியாகுமரிக்குப் போகவேண்டிய அவசியம் என்ன? பத்தாயிரம் காவல்துறையினர், கன்னியாகுமரியில் அவரது பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டு உள்ளனர். ஏன் இந்த நாடகம்? கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலிருந்தே தியானம் செய்திருக்கலாமே”
“அரசியலையும், மதத்தையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது. அது இரண்டுமே தனித்து தான் இருக்க வேண்டும். ஒரு மதத்தை சேர்ந்தவர் உங்கள் பக்கம் இருக்கலாம். மற்றொரு மதத்தை சேர்ந்தவர் உங்களுக்கு எதிராக இருக்கலாம். அதனால் மதம் சார்ந்த உணர்வுகளையும் தேர்தலையும் இணைப்பது என்பது தவறானது. என தெரிவித்துள்ளார்.