டில்லி:

ஆர்வகோளாறில் வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி நமோ ‘ஆப்’ மூலம் பாஜக எம்.பிக்களிடம் பேசுகையில் “நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள் மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது. மீடியாக்கள் கேமராக்கள் முன்னதாக பேசும்போது, நாம் சிறந்த சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் நினைத்துக்கொண்டு வார்த்தைகளை பிரயோகம் செய்கிறோம். அது நம்மை சிக்க வைக்கிறது.

நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகளை மீடியாக்கள் ஊதி பெரிதாக்குகிறது. தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்து கொண்டாலும் இது போன்று நடக்கிறது. இதை பற்றி கவலைப்படாமல் கருத்துக்களை கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கைள கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும்’’ என்றார்.