ஸ்ரீநகர்
இன்று ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி ரு.1500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
இன்று ஜம்மு காஷ்மீரில் 84 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் அலுவலகம் இது க்றித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
“ ஜம்மு காஷ்மீரில் சாலை உள்கட்டமைப்பு, தண்ணீர் விநியோகம், உயர்கல்வி உள்ளிட்ட ரூ.1,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும் தொழிற்சாலை வளாகங்கள் மற்றும் 6 அரசு கல்லூரிகளின் மேம்பாட்டு பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் நடைபெறும் இளைஞர்களுக்கான கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அதோடு அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ள 2 ஆயிரம் நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Jammu Kashmir, PM Modi, Rs.1500 crore project, Foundation stone, ஜம்மு காஷ்மீர், பிரதமர் மோடி, ரூ.1500 கோடி திட்டங்கள், அடிக்கல்