டெல்லி: விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மிகப்பெரிய அநீதி இழைத்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
வேளாண் சட்டத்தை அமல்படுத்தியதன் இந்த அநீதியை அவர் இழைத்துள்ளதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்பதை மோடி அரசு உணர வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளை ஆலோசிக்காமல் எந்தவொரு வேளாண் சட்டத்தையும் அமல்படுத்தியதில்லை.
ஆனால் மோடி தலைமையிலான அரசு முதலாளிகளுக்காக சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகளுடன் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும்.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும். பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி அக்டோபர் 3 முதல் 5ம் தேதி வரை ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.