டெல்லி
இன்று பிரதமர் மோஒடி அதிக மகசூல் அளிக்கும் 109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்துள்ளார்.
இன்று டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி 34 களப் பயிர்கள் மற்றும் 27 தோட்டப் பயிர்கள் உள்பட 109 ரகங்களை அறிமுகம் செய்து விவசாயிகள் மற்றும் ஆராய்சியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிறகு மோடி விளைநிலங்களை பார்வையிட்டுள்ளார்ர். மோடி இன்று அறிமுகம் செய்யப்பட்ட 109 ரகங்களில் களப் பயிர்களில் சிறுதானியங்கள், தீவனப்பயிர்கள், எண்ணெய்வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிர்களில் பழங்கள், காய்கறிகள், சணல், மூலிகைப் பயிர்கள் உள்ளிட்டவை அடங்கும்.
பிரதமர் மோடி இந்தப் புதிய பயிர் வகைகளின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர் மோடி, வேளாண்மையில் மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விவசாயிகள் மோடியிடம் இந்தப் புதிய ரகங்கள் அதிக நன்மை பயக்கும் என்றும், அவை தங்கள் செலவைக் குறைக்க உதவும் என்றும், சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.