டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரமாண்டமான நேதாஜி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, கார்டவயா பாத் (Kartavya Path)  எனப்படும் கடமை பாதையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க வையில் கட்டப்பட்டுள்ள  புதிய நாடாளுமன்ற வளாகத்தை திறந்துவைத்த பிரதமர்  மோடி – 28 அடி உயரத்தில் நேதாஜியின் பளிங்கு சிலையையும் திறந்து வைத்துடன், , ‘கடமை பாதை‘ திறந்தார்.  ஆங்கிலேய ஆட்சி சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் டெல்லியில் கடமை பாதை, நேதாஜி சிலை, புதுப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 8ந்தேதி)  திறந்துவைத்தார்.

நாட்டின் அதிகார மையமான டெல்லியில் ரூ.13 ஆயிரத்து 450 கோடியில் மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய பாரதீய ஜனதா அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, புதிய கட்டப்பட்டுள்ள  நாடாளுமன்ற வளாகத்திற்குள், பிரதமர் இல்லம், துணை ஜனாதிபதி இல்லம், அமைச்சக கட்டிடங்கள் என பல கட்டிடங்கள் கட்டுப்பட்டுள்ளது. மேலும், அனைத்து எம்.பி.க்களும் தங்கும் வகையில் குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.  அத்துடன், ‘இந்தியா கேட்’ தொடங்கி ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜபாதையை முற்றிலும் மாற்றியமைத்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும்,  அமைச்சகங்கள் இயங்கி வந்த வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள், ஜனாதிபதி மாளிகைக்கு பக்கத்தில் உள்ள செயலகக் கட்டிடங்கள் அருங்காட்சியகங்களாக மாற்றப்படுகின்றன.

அத்துடன்,அ டிமைக்கான அடையாளங்கள் அகற்றப்பட்டு,  ராஜபாதைக்கு புதிய கம்பீரம் சேர்க்க இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு 28 அடி உயரத்தில், 280 டன் எடையில், கருப்பு நிற கிரானைட்டில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நேதாஜி சிலைக்கான கல்லினை தெலுங்கானாவில் உள்ள கம்மத்தில் இருந்து டெல்லிக்கு (1,665 கி.மீ. தொலைவு) எடுத்து வர 140 சக்கரங்களைக் கொண்ட 100 அடி நீள லாரி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த பிரமாண்ட சிலை, சிற்பி அருண் யோகி ராஜ் தலைமையில் 26 ஆயிரம் மனித மணி நேரம் சிற்பிகளின் கடினமான உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று  புதுப்பிக்கப்பட்டுள்ள மத்திய விஸ்டா அவென்யூவில் கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.  அதைத்தொடர்ந்து சீரமைக்கப்பட்ட  கார்டவயா பாத் (Kartavya Path)  எனப்படும் கடமை பாதையை மோடி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி, பிரிட்டிஷ் ஆட்சியின் அடிமை சின்னமாக விளங்கிய ராஜபாதை இன்று கடமைபாதையாக வரலாற்றில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அடிமைத்தனம் முற்றிலும் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மெலும்,  ‘நேதாஜி காட்டிய வழியை இந்தியா பின்பற்றியிருந்தால், ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் மறக்கப்பட்டு இருந்தார். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் நேதாஜியின் லட்சியங்கள் மற்றும் கனவுகள் தொடர்பான பல முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இந்தியா கேட்டில் உள்ள நேதாஜியின் சிலை இனி நம்மை ஊக்குவித்து வழிகாட்டும்’ என்றும்  குறிப்பிட்டார்.