திருவனந்தபுரம்: கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில், கடந்த 17ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை துவக்கியது. தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அப்போது அவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி., சென்குமார் தெரிவித்திருந்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும் பிரதமரின் வருகையை முன்னிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உண்மை என்று தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை ) செய்தியாளர்களை சந்தித்த  சந்திப்பில் பேசிய பினராயி விஜயன், “பிரதமர் நரேந்திர மோடி கொச்சி வந்தபோது அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது உண்மையே. போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

[youtube-feed feed=1]