டெல்லி: மியான்மர் நிலநடுக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா சார்பில் உடனடியாக சிறப்பு விமானத்தில் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதனப்டி, மியான்மருக்கு உடனடியாக, முதல்நாடாக, இந்தியா, நிவாரணம் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டி உள்ளது.
மியான்மர்-தாய்லாந்தில் நேற்று (மார்ச் 28ந்தேதி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை முற்பகல் 11.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆக இருந்தது. இதையடுத்த அடுத்த 12 நிமிடத்தில் முண்டும் ரிக்டர் அளவு கோலில் 6,4 அளவில் மீண்டும் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் அருகே உள்ள அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது.
இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியதுடன், மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கிடையில், இன்று (29ந்தேதி) காலை தகவலின்படி, மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளை உலுக்கிய நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், இதுவரை 1,002 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், மியான்மர் நாட்டு அரசின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டுக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. இந்தியா சார்பில் நள்ளிரவே, மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருள்கள் சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக இந்திய அரசு அறிவித்து உள்ளது. நிலநடுத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில், முதல் நாடாக இந்திய விமானம் நிவாரண பொருட்களுடன் இறங்கி, சேவையாற்றி வருகிறது.
முன்னதாக நேற்று இந்திய விமானப்படையின் (IAF C 130J) விமானம் மூலமாக உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதாரப் பொருள்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் (பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கேனுலா, ஊசிகள், கையுறைகள், பஞ்சுகள், சிறுநீர் பைகள் உள்ளிட்ட பிற பொருள்கள்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.