டெல்லி

பிரதமர் மோடி தமிழக முதல்வரிடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

நேற்றி காலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்  அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதால், தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அவர் தொலைபேசியில் வாயிலாக முதல்-அமைச்சரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது,