டெல்லி
பிரதமர் மோடி இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை கோனேரு ஹம்பி எதிர்கொண்டு விளையாடி 8.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பிடே மகளிர் உலக ராபிட் செஸ் போட்டியில் கோனேரு ஹம்பி இரண்டாம் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில்,
”2வது முறையாக உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் கோனேரு ஹம்பி. இதன்மூலம் இப்படி ஒரு நம்பமுடியாத, மகத்தான சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உங்களின் புத்திசாலித்தனம் பலரையும் ஊக்குவிக்கட்டும்”
எனப் பதிவிட்டுள்ளார்.