டெல்லி: பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
பிஎஸ்எல்வி – சி 49 ராக்கெட் இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திராவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ் – 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் 9 வெளிநாட்டு செயற்கை கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். இந்திய விண்வெளியில் இன்று பிஎஸ்எல்வி- சி 49 / இஓஎஸ் – 01 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. கொரோனா காலத்தில் குறித்த காலத்தை இந்த திட்டத்தை செயல்படுத்த பல தடைகளை முறியடித்தனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.