குவைத் :
குவைத் தலைவர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
91 வயதாகும் ஷேக் சபா அல் அஹ்மத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி:
குவைத் மாநிலத்தின் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவிற்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருதத்தக்க தருணத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அல் சபாவின் குடும்பத்தினருடனும், குவைத் மாநில மக்களுடனும் உள்ளன. குவைத் மாநிலமும் அரபு உலகமும் ஒரு அன்பான தலைவரையும், இந்தியாவின் நெருங்கிய நண்பரும், ஒரு சிறந்த அரசியல்வாதியையும் இழந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாவின் மறைவிற்கு ஐக்கிய அரபு நாடு மூன்று நாள் துக்க காலத்தில் அறிவித்து, அவருடைய ஞானம், சகிப்புத்தன்மை மற்றும் அமைதிக்காக பாராட்டியுள்ளது, அதுமட்டுமின்றி அபுதாபியின் இளவரசரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவரை ஒரு சிறந்த முன்னோடி என்று வர்ணித்துள்ளார்.
மேலும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு புத்திசாலித்தனமான தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.