லக்னோ: பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்த நிலையில், அதை, குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளர். இந்த அவலம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இதற்கிடையில், உ.பி.யின் மதுரா நகர், நிகாமில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகியின் படங்களை யாரோ வீசிவிட்டு சென்றுள்ளனர். இதை அந்த பகுதியில் பணியில் இருந்த துப்புறவு தொழிலாளி, தனது குப்பை அள்ளும் வண்டியில் எடுத்துச் சென்றார். இதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ந்த ஒப்பந்தத் தொழிலாளியின் வேலை பறிபோனது. அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது.
விசாரணையில், அந்த ஒப்பந்தத் தொழிலாளி பிரதமர் மற்றும் சில தலைவர்களின் படங்களைத் தவறுதலாக குப்பை வண்டியில் எடுத்துக் கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது என மதுரா-பிருந்தாவனின் கூடுதல் நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.