டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு மகளிர் தின பரிசாக பிரதமர் மோடி, சிலிண்டர் விலையைரூ.100 குறைத்து உத்தரவிட்டு உள்ளார்.
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல நிறுவனங்கள் பெண்களை போற்றும் நிலையில் பல நிறுவனங்கள் பல்வேறு ஆஃபர்களையும் அறிவித்து உள்ளன.
இநத் நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இந்திய பெண்களுக்கு பெண்கள் தின பரிசாக சிலிண்டர் விலை குறைப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன்படி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் தளத்தில், இன்று, மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது நாரி சக்திக்கு பயனளிக்கும்.
சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு ‘எளிதாக வாழ்வதை’ உறுதிசெய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என தெரிவித்துள்ளார்.