டெல்லி

பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரில், வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக கூறி கடந்த மாதம் அந்நாட்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி நேற்று அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லி அருகே உள்ள ஹிண்டண் விமானப்படை தளத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்தடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்ட்ன்  பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்றிரவு நடைபெற்றுளது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது வங்கதேச நிலவரம், ஹசீனா இந்தியா வந்துள்ளது குறித்து ஆலோசனை நடந்ததாககூறிப்படுகிறது.