டெல்லி: மோடிஜி மவுனத்தை கலைத்துவிட்டு, கேள்விகளை எதிர்கொள்ளுங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயகிள் கிளர்ந்தெழுந்து உள்ளனர். பஞ்சாபில் இருந்து அரியானா வரை ராகுல்காந்தி, டிராக்டர் மூலம் மத்தியஅரசு எதிராக கண்டனப் பேரணி நடத்தினார். முன்னதாக அரியான மாநில எல்லையில், அவரது டிராக்டர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், சிறிது நேரம் கழித்து, அவர் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து, இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், விவசாய பேரணி தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, பிரதமர் மோடி மெளனத்தை கலைத்துவிட்டு நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், பி.எம் ஜி, உங்கள் கைகளை சுரங்கப்பாதையில் தனியாக விட்டு, உங்கள் மவுனத்தை கலையுங்கள். நாட்டு மக்களின்
கேள்விகளை எதிர்கொள்ளுங்கள், நாடு உங்களிடம் நிறைய கேட்கிறது. என்று பதிவிட்டு உள்ளார்.
கேள்விகளை எதிர்கொள்ளுங்கள், நாடு உங்களிடம் நிறைய கேட்கிறது. என்று பதிவிட்டு உள்ளார்.