புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகிய இருவருக்குமே பொருளாதாரம் தெரியாது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் சர்ச்சை நாயகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியசாமி.
அவர் கூறியுள்ளதாவது, “மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறைகளின்படி பார்த்தால், இந்திய பொருளாதாரமானது, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்.
ஆனால், உண்மை இப்படியிருக்க, நமது பிரதமரும், நிதியமைச்சரும் எதற்காக இந்தியப் பொருளாதாரம் உலகின் 5வது பெரிய பொருளாதாரம் என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள்? ஏனென்றால், அவர்கள் இருவருக்குமே பொருளாதாரம் தெரியாது” என்றுள்ளார்.
ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் பி.எச்டி. பட்டம் பெற்ற சுப்ரமணியசாமி, அங்கே பேராசிரியராகவும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி