சென்னை

மிழகத்தில் தற்போது பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசி உள்ளார்

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது.  தலைநகர் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் கனமழை பெய்ய துவங்கி உள்ளது.  மாநிலம் எங்கும் அணைகள் நிரம்பியதால் நீர் திறக்கப்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இத்தகைய கனமழை கடந்த 2015 ம் ஆண்டிற்குப் பின் சென்னையில் மீண்டும் பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.  மழை நீர் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது குறித்து பிரதமர் மோடி தொலைப் பேசிமூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் மழை விபரம் குறித்துக் கேட்டறிந்துள்ளார். மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மத்திய அரசு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில்

தமிழக முதல்வர் திரு mkstalin  உடன் பேசினேன். மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலைமை குறித்து ஆலோசித்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நடுவன் அரசால் முடிந்த எல்லா உதவிகளையும் அளிப்பதாக உறுதியளித்தேன். அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக நான் வேண்டுகிறேன்.

எனப் பதிவிட்டு உள்ளார்.