மதுரை: பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
பழனி முருகன் கோவிலில இந்து அல்லாதவர் கோவிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை இருந்தது. அதை திமுக அரசு பதவி ஏற்றதும் அகற்றியது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதே இடத்தில் மீண்டும் பதாகை வைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் அதை திமுகஅரசு கண்டுகொள்ள நிலையில். கடந்த 2023ம் ஆண்டு, ஜூன் மாதம் சாகுல் என்பவர் தனது நண்பரின் குடுமபத்தை பழனி கோவிலுக்கு சுற்றுலாவாக சுற்றி பார்க்க அழைத்து வந்துள்ளார். அப்போது கோவில் அதிகாரிகள் மாற்று மதத்தினர் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை என கூறியதை அடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அறிவிப்பு பலகை வைத்திருந்ததால் வந்திருக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்து கோவில்களில் வேறு மதத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுவது சமூக வலைதளங்களில் பேசும்போருளானது. இதையடுத்து, அங்கு “இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி” என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. இதையும் சிலர் சர்சையாக்கினர். ஆனால், இதுபோன்ற அறிவிப்பு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்ததுதான் என்றும், இந்து கோவில்களில் காலங்காலமாக இது கடைபிடிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டன.
இந்த நிலையில், மீண்டும், இந்து அல்லாதவர் கோவிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையினைத் தொடர்ந்து, பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த அல்லாதோர் கோவில் கொடிமரத்தை தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்க கூடாது என்றும், இந்து அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதைகையை பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன்,மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.