நியூயார்க்:
மெரிக்காவிலிருந்து வெளியாகும்,  ‘பிளேபாய்’ இதழ் உலகமுழுதும் இளைஞர்களிடையே பெரும் ஆதரவை பெற்ற இதழ்.  இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் வெளியாகும். இப்படி தங்கள் படம் வெளியாவதை பிரபலங்கள் கவுரமமாக நினைக்கிறார்கள்.

1953-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழ்  உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற சாதனையை படைத்தது. 1975-ம் ஆண்டுகளில் 70 லட்சம் பிரதிகள் வரை விற்றது.  தற்போது இணையதள ஊடகங்களின் அபார வளர்ச்சியால் மாதம் எட்டு லட்சம் பிரதிகள் அளவுக்கு குறைந்துவிட்டது.

இதற்கிடையே, 2016-ம் ஆண்டிலிருந்து ‘பிளேபாய்’ அட்டையில் கவர்ச்சி படங்கள் இடம் பெறாது என நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது. கடைசியாக, ‘பிளேபாய்’ இதழின் அட்டையில், பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனின், கவர்ச்சி படங்கள் இடம் பெற்றன.

இந்த இதழைத் துவக்கி நடத்தியவர் ஹெப்னர்.  பிளேபாய் இதழ் போலவே இவரும் உலகப்புகழ் பெற்றவர்.  தனிப்பட்ட வாழ்விலும் ப்ளேபாயாக வலம் வந்தார் இவர். இதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார். தனது  86-வது வயதில்  தன்னைவிட 60 வயது குறைவான கிறிஸ்டன் ஹாரீஸ் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார் ஹெப்னர்.

இந்நிலையில், வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துகொண்டிருந்த ஹெப்னர் இன்று மரணமடைந்தார். இதை  அவரது மகன் அறிவித்துள்ளார்.