நெட்டிசன்:Farook Abdulla அவர்களின் முகநூல் பதிவு:

அரிசி என்பது தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் தானிய வகை
நாம் காலை மதியம் இரவு மூன்று வேலையும் அரிசியை நம்பி தான் இருக்கிறோம்
சமீபத்தில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டின் அரிசி விற்பனை 40 சதவிகிதம் குறைவானதாக படித்தேன்

அரிசியைப்போன்று ப்ளாஸ்டிக்கை மிக நுண்ணியமாக செய்ய எவ்வளவு பொருளாதாரம் செலவாகும்? மேலும் ஒரு கிலோ அரிசியை விட ஒரு கிலோ ப்ளாஸ்டிக் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்த. விலை குறைவான பொருளில் விலை அதிகமான பொருளை கலப்படம் செய்ய என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது???

பிறகு ஏன் அரிசியின் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது?? அரிசியின் மீது களங்கத்தை ஏற்படுத்தினால் மக்கள் கோதுமை, மைதா பக்கம் திரும்புவர் இவையெல்லாம் நம்மிடம் விளைபவை அல்ல . மேலும் கோதுமை மைதாவில் உள்ள தீங்குகள் எண்ணற்றவை

மேற்கு உலகம் க்ளூடனை மெல்ல மெல்ல தவிர்த்து வருகிறது .
நாமோ க்ளூடனுடன் உள்ள கோதுமையை உணவாக எடுத்து வருகிறோம் இந்த நிலையில் முழு நேரமும் கோதுமைக்கு நாம் மாறினால் பல தொற்றா நோய்களும்

ஆட்டோ இம்யூன் வியாதிகளும் நமக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நம் அரிசி கோதுமையை விட பல மடங்கு சிறந்தது. ஆகவே வீண் புரளிகளை நம்ப வேண்டாம்

சோய்ப் அக்தராக மாறி சோற்றை பந்தாக்கி எழும்புகிறதா என்று போட்டுப்பார்க்கிறீர்களா??

சில ஹைப்ரிட் வெரைட்டி அரிசிகள் ஜவ்வரிசியின் தன்மையோடு இருப்பதால் பந்து போன்று எழும்புகிறது

கவலை வேண்டாம்

நாம் பேலியோவில் அரசியே வேண்டாம் என்று பரப்புரை செய்கிறோம்

ஆனால் காரணமேயின்றி அரிசி மீது பரப்பப்படும் பொய் வதந்திகளை என்னவென்று பார்த்துக்கொண்டு இருப்பது ??

வீண் புரளிகளை பரப்ப வேண்டாம் சகோதர சகோதரிகளே ..