சென்னை
தமிழக அரசு உணவகங்களில் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கவர்களுக்கு தடை விதித்துள்ளது.
உணவகங்களில் இருந்து உணவுப்பொருட்கள் பார்சலாக வாங்கும் போது அவற்றை பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாயில் கவர்களில் கட்டிக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இவர்றுக்கு சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வர்லர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை உணவகக்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் செய்ய பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாயில் கவர்களுக்கு தடை விதித்துள்ளது.
மேலும் பிளாஸ்டிக் பேப்பர், கவர்கள், சில்வர் பாயில் கவர் போன்றவற்றில் உணவுகளை கட்டிக் கொடுத்தால், முதல் முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தடையை மீறினால் உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.