அகமதாபாத்: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஆட்டம், ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தற்போதுவரை 8 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் ஆடிவரும்  நிலையில்,  அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக மேலும் ஒரு அணியை சேர்க்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல்-லின் 9வது அணியாக  குஜராத் நகரை மையப்படுத்தி புதிய தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் விளையாடப்படும் தொழில்முறை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர். இது கடந்த 2008ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) துவங்கப்பட்டது.   இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  வகையில் ஆடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் விளையாடப்பட்டது.  தற்போதுவரை இந்த ஐபிஎல் தொடரில் சென்னை உள்பட எட்டு அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.

ஐபிஎல் உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற   கிரிக்கெட்  போட்டியாக ஐபிஎல் போட்டிகள் திகழ்வதாக கூறப்படுகிறது.  கடந்த  2014ஆம் ஆண்டு அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் சராசரி வருகையின் அடிப்படையில் ஐபிஎல் உலகளவில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 2010ஆம் ஆண்டில், ஐபிஎல் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உலகின் முதல் விளையாட்டு நிகழ்வாக ஆனது.

ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் பன்னிரண்டு பருவங்கள் நடைபெற்றுள்ளன. 2019 பருவத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ், நடப்பு (2020) ஐபிஎல் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் குஜராஜ் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அணி புதியதாக சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் 9 ஆக உயரும் வாய்ப்பு உள்ளது.

தற்போதுள்ள அணிகள் விவரம்:

1) சென்னை சூப்பர் கிங்ஸ்

2) சன் ரைசர்ஸ் ஐதராபாத்

3) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

4) மும்பை இந்தியன்ஸ்

5) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

6) ராஜஸ்தான் ராயல்ஸ்

7) டெல்லி கேப்பிடல்ஸ்

8) கிங்ஸ்லெவன் பஞ்சாப்

9) ?