பிரேசில்: பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மாநிலத்தில் வோபாஸ் விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 61 பேரும் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரேசில் அறிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ‘வோபாஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர்.-72 என்ற பயணியர் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. முன்னதாக, அந்த விமானம், பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு வின்ஹெடோ நகரில் சென்று கொண்டிருந்த போது விமானம் நிலை தடுமாறு கீழே விழுந்து வெடித்ததை உள்ளூர் தீயணைப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது. வின்ஹெடோ நகரில் உள்ள வீடுகளின் மீது தலைகீழாக கவிழ்ந்து விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தின்ல், அதில் பயணித்த 62 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த 57 பயணிகள், 4 விமான ஊழியர்கள் என 61 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் அந்த விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்து சிதறி தீப்புடித்ததாகவும், இதனால், அந்த இடமே தீப்பிழம்பாக மாறியதால், அதனுள் இரந்த யாரும் உயிருடன் பிழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை விமான நிறுவனமான . வியோ பாஸ் விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 58 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 4 பணியாளர்களுடன் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸ் (Guarulhos) நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது. விபத்தில் விமானத்தில் பயணித்த 58 பயணிகள், 4 விமான ஊழியர்கள் என 62 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்துக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, ‘துக்கச் செய்தி’ என்று தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அவர்களுக்காக நாம் அஞ்சலி செலுத்துவோம்’ என பிரேசில் அதிபர் லூலா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ‘
இந்த சோகமான விபத்துக்கு நாங்கள் வருந்துகிறோம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் உதவி செய்வோம்’ என பிரேசிலில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.