சென்னை:

சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 2 லட்சம் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார்.

பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தலைநகர் சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.  பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வடமாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மழைநீர் தொட்டிகள்

இந்த நிலையில்,  சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை யில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது மற்றும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை புனரமைப்பது குறித்து  கருத்தரங்கு நடைபெற்றது.

அதற்கு பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ச்ர எஸ்.பி.வேலுமணி, சென்னையில் உள்ள 200 வார்டுகளில், ஒரு வார்டுக்கு தலா 1000 மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னையின் பிரதான பகுதிகள், சாலையோரங்கள், கால்வாய் பகுதிகள், ஏரி குளங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் அரசியல் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், வட மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் தொட்டிகள் போல சென்னை யில் அரசு 2 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை எங்கே அமைக்கும்… அதற்கான இடங்கள் உள்ளதா?

தமிழக அமைச்சரின் தகவல் வெற்றுவேட்டு என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.