மும்பை: 
விற்பனையாகாத கட்டிடங்களை விலையைக் குறைத்து விற்பனை செய்யுங்கள் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டுக் கவுன்சில் அமைப்பினருடன் மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் ஆன்லைன் மூலம் கலந்துரையாடினார்.  அப்போது வீடியோவில் பேசிய அமைச்சர்,  நாங்கள் சில சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றும், இந்தச் சலுகையை பெற விட்டாலும், கட்டிடங்களை விற்பனை செய்யுங்கள். இதுகுறித்து அதிகமாக நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சின் மூலம், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அரசு அவர்களுக்கு எந்த நிதியுதவியும் செய்யப் போவதில்லை என்றும் அவர்கள அறிந்து கொண்டார். மேலும், கட்டிடங்களுகான மார்க்கெட் மேம்பட்ட பின்னர் அதிக விலைக்கு விற்று கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியதிலிருந்து அவர்கள் தெரிந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், நீங்கள் விலையைக் குறைத்து விற்பனை செய்யா விட்டால், உங்கள்  விற்பனை அப்படியே நின்று விட வாய்ப்புள்ளது. இதனால், வாடிக்கையாளர் வாங்க தயார் என்ற நிலையில், குறைந்த விலையிலாவது கட்டிடங்களை விற்பனைச் செய்து விடுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


அடுக்கு மாடிக் குடியிருப்பாளர்களை விற்பனை செய்யும் அதிபர்களுடன் பேசிய அமைச்சர்,  உங்களில் எவரேனும் அரசாங்கம் உங்களுக்கு நிதியளிக்கும் வரை காத்திருக்க முடியும் அல்லது  சந்தை மேம்படும் வரை காத்திருக்கவும் முடியும். ஆனாலும், சந்தை தற்போது மேம்படுமா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது. எனவே, போட்டியை எதிர்க்கொள்ளும் வகையில், குறைந்த விலையில் உங்கள் கட்டிடங்களை விற்பனைச் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹிரானந்தனி, இதை பரிந்துரையை வழங்கியதற்காக   அமைச்சர்  கோயலை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்.   இதை கருத்தை  எச்.டி.எஃப்.சி வங்கியில் தலைவர்  தீபக் பரேக் மற்றும் கோடக் வங்கியின் தலைவர் உதய் ஆகியோரும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பேசிய அவர்கள்,  இது வங்கி கடன் பெற்று வீடு வாங்கியவர்களுகான அறிவுரையாகும் என்றும் டெவலப்பர்களுக்கான அறிவுரை அல்ல என்றும் கூறியுள்ளனர்.

ஹிரானந்தனி பேசுகையில்,  வருமான வரிச் சட்டத்தின் விதிகள் எந்தவொரு விலையையும் குறைத்தால் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் கடுமையான அபராதம்  விதிக்கப்படும்.  வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 43 சிஏ படி, தயாராக கணக்கீட்டு விகிதம் அல்லது வட்ட விகிதத்தில் 10% க்கும் குறைவாக விற்கும் எவரும் 35% வித்தியாசத்தில் [அசல் மற்றும் திருத்தப்பட்ட விலைக்கு இடையில்] அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். வாங்குபவர் 35% அபராதமும் செலுத்துவார். எனவே, இந்த பிரிவு திருத்தப்படாவிட்டால், நாங்கள் விலையை குறைக்க தயாராக இருக்கிறோம் இருக்கிறோம் என்றனர்.  ஏனென்றால் மக்கள் ஏற்கனவே ஒரு வருடத்தில் 10% விலைகளைக் குறைத்துள்ளனர். எனவே, அமைச்சர்  கோயலை நிதியமைச்சரிடம் இந்த ஏற்பாட்டில் திருத்தம் செய்யுமாறு கோரியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியாவின் தலைவரும் எம்.டி.யுமான ஷிஷிர் பைஜால் தெரிவிக்கையில்,  டெவலப்பர்கள் ஏற்கனவே விற்கப்படாத கட்டிடங்களால் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். சில மட்டத்தில், விலைகளை குறைக்க  அமைச்சரின் பரிந்துரை  ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறை அனுபவித்து வரும் தேவை குறைந்து வருவதே பிரச்சினையின் முக்கிய அம்சமாகும். எனவே, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு போதுமான ஊக்கத்தை அளிப்பதன் மூலம் நிலையான நீண்ட கால தேவையை உருவாக்குவதே இதற்கு முக்கிய தீர்வாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறைக்கு கோரிக்கையை மீண்டும் எழுப்புவதற்கும் அதன் பங்குதாரர்களின் கவலைகளை எளிதாக்குவதற்கும் உறுதியான நடவடிக்கைகள் தேவை ”என்று பைஜால் கூறினார்.