டெல்லி:
முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக, ராணுவ முன்னாள் தலைமை தளபதி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று பதவியேற்றார். அவருக்கு முப்படைத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதிகளாகன பாதுகாப்புத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவத் தலைவர் மனோஜ் முகுந்த் நாரவனே, ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் மற்றும் கடற்படைத் தலைவர் கரம்பீர் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் சென்றனர். பிபின் ராவத்துக்கு ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தெற்கு கட்டிட வளாகத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்று முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், முப்படைகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்ப திலும், முப்படைகளும் ஒரே குழுவாக இணைந்து செயல்படுவதிலும் தாம் அதிகம் கவனம் செலுத்த போவதாக கூறினார்.
பாதுகாப்புப் படைகள் அரசியலுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விக்கு, அரசியலில் இருந்து பாதுகாப்புப் படைகள் நீண்ட தூரம் விலகியிருப்பதாக வும், மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசின் உத்தரவுக்குட்பட்டே பாதுகாப்புப் படைகள் செயல்படுவ தாகவும் பதிலளித்த அவர், வரும்காலத்திலும் அதேபோல்தான் பாதுகாப்புப் படைகள் செயல்படும் என்றும் தெரிவித்தார்.