மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் குழாய் வெடிப்பால் கடலின் மேற்பரப்பில் பரவிய கச்சா எண்ணெயில் இருந்து தீ பற்றி எரிந்தது.

பெமெக்ஸ் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்தை ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின் முழுவதுமாக அணைத்தனர்.

https://twitter.com/EoinHiggins_/status/1411075158006284290

கடல் பரப்பில் தீ பற்றி எரிந்ததை பார்த்தவர்கள் இது மிகப்பெரும் நெருப்புக் கண் போன்று இருந்தது என்று கூறினர்.

தீயை அணைக்க இந்நிறுவன ஊழியர்கள் ரசாயனத்தைப் பயன்படுத்தினர், தீ கட்டுக்குள் வந்தபின், இந்த ரசாயன கலவையுடன் பார்க்கும் போது எரிமலை பிழம்பாக காட்சியளித்ததாகவும் கூறினர்.

இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.