திருவனந்தபுரம்:
தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் எழுத கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆயிரகணக்கான தமிழக மாணவர்கள் கேரளாவுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளா முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், ‘‘ நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு ள்ளார்.