திருவனந்தபுரம்:

அடித்துக் கொலை செய்யப்பட்ட பழங்குடியின வாலிபர் மதுவின் வீட்டுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்றார். மதுவின் தாய், சகோதரிகள், உறவினர்களிடம் மதுவின் மரணத்துக்கு நீதி கிடைக்கச் செய்வதாக பினராய் விஜயன் உறுதி அளித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் கேகே ஷைலஜா உடன் சென்றார்.

பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் பேசியுள்ளார். ரூ.200 தினக்கூலி கிடைக்கும் வகையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உணவு பொருளை திருடியதாகக் கூறி மதுவை அடித்துக் கொன்ற சம்பவத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.