பாலாசோர்,

எதிரிகளை தாக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது.

ராணுவ பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும், அதிநவீன, ‘பினாகா ராக்கெட் மார்க் 2’ வெற்றிக ரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள, சண்டிபூர் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, இந்திய தயாரிப்பான அதிநவீன, ‘பினாகா ராக்கெட் மார்க் 2’ நேற்று பிற்பகல், 12:45க்கு, சோதனை முறையில் ஏவப்பட்டது.

இந்த வகை ராக்கெட்டுகள்  இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சோதனை செய்யப்பட்ட  ‘பினாகா ராக்கெட் மார்க் 2’  வகையானது,எதிரியின் இலக்கை துல்லிய மாக கணித்து தாக்க முடியும் வகையிலும், கடைசி நேரத்தில் இலக்கை மாற்ற தேவைப்படின் அதற்கான செயல்பாடுகளும் இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சோதனை நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

ராக்கெட் சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, விஞ்ஞானிகளுக்கு, ராணுவ அமைச்சர், மனோகர் பரீக்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.