ஆன்மீக யாத்திரை – சபரிமலை – முதல் பகுதி
சபரிமலை (என்பது கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது.
மேலும் சராசரியான கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம்
சங்ககால வரலாறு:
இது சங்ககாலச் சேரர்களின் வழிபாட்டுத் தலம்.
வழிபாட்டு மரபு:
ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.
சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ளபடியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே.
மண்டல பூசை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கு அன்றும் (சனவரி 14- “மகர சங்கராந்தி”) மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.
(அடுத்த பகுதியில் சந்திப்போம்)