டெல்லி: ‘பிக்னிக்’ பிரதமர் என விமர்சிக்கப்படும் பிரதமர் மோடி கடந்த 3 ஆண்டுகளில் 28முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்,  அவரது வெளிநாடு பயண செலவாக இதுவரை ரூ.258 கோடி  செலவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  மார்ச் 20ந்தேதி அன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, பிரதமர் மோடியின் வெளிநாடு விஜயம் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்தியஅரசு பதில் அளித்துள்ளது.  கார்கே கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த மத்திய வெளியுறவு இணை மந்திரி பபித்ரா மார்கெரிட்டா,  கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் 38 வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,   பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான  மொத்த செலவு சுமார் ரூ.258 கோடி என அவர் தெரிவித்தார். இதில் முக்கியமாக, 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கான செலவு ரூ.22.89 கோடி  என்றும், கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது. முன்னதாக 2023-ல் ஜப்பான் பயணத்துக்கு ரூ.17.19 கோடியும், 2022-ல் நேபாள பயணத்துக்கு ரூ.80 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.