சிங்கப்பூர் :
கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து உடலளவில் விலகி இருக்க வலியுறுத்தியே சமூக இடைவெளி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
சமூக இடைவெளி என்ற சொல்லை தவறாக புரிந்து கொள்ளும் பலர், வெளியூருக்கு சென்று வரும் தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை, பறவைகளையும் விலங்குகளையும் போல் ஊருக்கு வெளியே மரத்தில் வீடுகட்டி தங்கவைக்கும் அவலம் கோமியத்தை அருமருந்தென்று குடிக்கும் ஊரில் நடப்பதொன்றும் அதிசயமில்லை.
ஆனால், இதுபோன்ற ஒரு சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கிறது.
சிங்கப்பூரில் உள்ள ஒரு கிருத்தவ தேவாலயத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட, இதை அறியாமல் அவர் சர்ச்சுக்கு வர, குறைந்த கால இடைவெளியில் இவர் மூலம் 17 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சையின் பலனால், அனைவரும் குணமாகி வீடு திரும்பினர், ஆனால் இவர்களை சுற்றி இருந்த மக்களின் மனங்களில் தான் இவர்களை பற்றிய பார்வை இன்னும் மாறவில்லை.
இவர்களை கண்டாலே விலகி ஓடுவதும், இவர்களின் குழந்தைகளை கொரோனா வைரஸ் பாதித்தவன் குழந்தை என்று வர்ணிப்பதும் நிகழ்கிறது.
இந்த சமூக அவலத்தை போக்க இவர்களால் என்ன நன்மைகள் என்பதை விளக்கும் விதமாக சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று விழிப்புணர்வு குறும்படம் தயாரித்துள்ளது… அந்த வீடியோ…..
நன்றி : என்.ஏ.எஸ். டெய்லி