தேர்வு எழுதும் தாய்மார்கள் – குழந்தையைக் கவனிக்கும் காவல்துறையினர் : வைரலாகும் புகைப்படம் 

Must read

ராங்க், அசாம்

சாம் மாநில இரு பெண் காவல்துறையினர் தேர்வு எழுத சென்றிருக்கும் பெண்களின் குழந்தைகளைக் கவனிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது.   இதில் கலந்துக் கொண்டவர்களில் அதிக அளவில் பெண்கள் இருந்தனர்.   எனவே இந்த தேர்வு நடக்கும் இடங்களில் பெண் காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வாறு தராங்க் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் இந்த தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டது.  அங்கு இரு பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் தேர்வு எழுத வந்துள்ளனர்.  இந்த குழந்தைகளை அங்கு பணியில் ஈடுபட்ட இரு பெண் காவலர்கள் கவனித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இதை புகைப்படமாக்கி அசாம் மாநில காவல்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.   இந்த பதிவுக்குப் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் இந்த பதிவை ஏராளமானோர் மறு பகிர்வு செய்துள்ளனர்.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More articles

Latest article