மும்பை: மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்யும் முன்பாக அதன் படியை ஒரு நபர் தொட்டு வணங்கிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டிருந்த மும்பை உள்ளூர் ரயில் சேவை 11 மாதங்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதியன்று தொடங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்யும் முன்பாக பயணி ஒருவர் வண்டியின் படியை தொட்டு தலை வணங்கிவிட்டு உள்ளே ஏறியுள்ளார். அந்த காட்சியை கேமிராவில் படம் பிடித்த நபர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ள எழுத்தாளர் தேவ்தத் பட்நாயக் என்பவர், இது போன்ற சிறப்பையும், அழகையும் மும்பையை சேர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று கூறி உள்ளார்.
இது தான் இந்தியாவின் ஆன்மா. ஒருபோதும் நாம் அதை இழக்கக்கூடாது என கடவுளை பிரார்த்திக்கிறேன் என்று தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். மும்பை ரயிலில் பயணம் செய்யும் முன்பாக அதன் படியை தொட்டு வணங்கிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.