ஜெருசலேம்: இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனம் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்கள் மற்றும பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ‘கான் , ‘பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ‘ மற்றும் பிரான்ஸ் அமைச்சர்கள் உட்பட 15 பேர் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது . இந்த விவகாரம் குறித்து தனி விசாரணை நடத்த , பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து , ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் மற்றும் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராம்போசா ஆகியோரும் பெகாசஸ் மென் பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது .
இந்த‘ உளவுப் பணியை இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதுமாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தவறான தகவல் என இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெகாசஸ் நிறுவனம் உளவு பார்த்ததாக வெளியான பட்டியல் சரியானது அல்ல. அந்த செல்போன் எண்கள் என்.எஸ்.ஓ. குழுமத்துடன் தொடர்புடையவை அல்ல. இருந்தாலும், தங்களது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், தேவையற்ற இடங்களில் செய்லபடும் அமைப்பை மூடிவிடுவோம் எனவும் அறிவித்துள்ளது.