மணிலா: தென் சீன கடல் பகுதியில், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடும் கடல் பகுதியில், 200க்கும் மேற்பட்ட சீன மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு, மிரட்டல் விடுக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு கவலை வெளியிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின், பலாவன் மாகாணத்தின் மேற்கு பகுதியில் இருந்து, 324 கி.மீ. தொலைவில், தென் சீன கடல் பகுதியை, சீனா – பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன.
கடல் வளங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது.
வளங்கள் நிறைந்த இந்தப் பகுதி, தங்களுக்கு மட்டுமே உரியது என்று பிலிப்பைன்ஸ் உரிமை கொண்டாடி வருகிறது.
இப்பகுதியில், கடந்த 7ம் தேதி, 200க்கும் மேற்பட்ட சீன மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு கவலை தெரிவித்துள்ளது.